Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
வைத்தியர்களின் பரிந்துரையுடன் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டிய மருந்துகளை எவ்வித அனுமதியுமின்றி பதுளையில் விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை நீதவான் டபிள்யு.என். டி. சில்வாவால் குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒன்றரை இலட்ச ரூபாய் அபராதத் தொகை நேற்று முன்தினம் (23) அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மருந்தக அனுமதிப்பத்திரம் தொடர்பில், தேசிய மருந்தக அதிகாரசபைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் மருந்துகள் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமையவே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளது.
சுகயீனமுற்ற நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் குறித்து வைத்தியசாலையின் ஆராய்ந்து பார்த்த போது பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வைத்தியர்களின் பரிந்துரை அல்லது நேரடி கண்காணிப்பின் கீழ் மாத்திரம் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் பதுளை- கைலகொட பிரதேசத்திலுள்ள மருந்தகம் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த மருந்தகத்தின் உரிமையாளரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரிடம் அபராதம் அறவிடப்பட்டு, நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
18 May 2025