2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மலையக சமூகத்தை ஏற்று நடத்த இ.தோ.கா.வுக்கே சக்தி உண்டு

Kogilavani   / 2016 ஜூன் 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

"எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களுக்காக சேவை செய்து மக்களின் நலனே தங்களுடைய நலன் என எண்ணி செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு மட்டுமே, இந்த மலையக சமூகத்தை ஏற்று நடத்தக்கூடிய சக்தி இருக்கின்றது" என முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், இந்தச் சமூகம் கீழே இறங்கிவிடக் கூடாது என்பதில் மிக கவனத்தோடு இருக்கின்றார். இன்று மலையக மக்கள் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமுகமாக உருவெடுத்துள்ளனர்' என்றார்.

'தோட்டங்களில் மாட்டுப் பட்டிகள் போல் காணப்பட்ட பாடசாலைகள் மாடிகட்டடங்களாக மாறியுள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

பல ஆயிரக்கணக்கானவர்கள் அரசதுறையில் தொழில் பெற்றுள்ளனர். மலையகத்துக்கென ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் கல்வியல் கல்லூரியும்  உருவாக்கப்பட்டுள்ளன. தொண்டமான் தொழிற் பயிற்சி மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. லயத்து வாழ்கையை முடிவுக்கு கொண்டுவர இதுவரை 35,000 தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன” என கூறினார்.

'அரசாங்க நிதியில் தோட்டங்களை அபிவிருத்தி செய்யமுடியாது என்ற விதியை உடைத்தெரிந்து, அரசாங்க நிதியைக் கொண்டு பாதைகள், பாலங்கள், விளையாட்டு மைதானங்கள், பாலர் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், பிரஜாசக்தி மையங்கள், குடிநீர் வசதிகள், கோவில்கள் உட்பட தேவாலங்கள் போன்றன அபிவிருத்தி செய்யப்பட்டன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .