2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மலையக மக்களின் கோரிக்கை நியாயமானதே

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

'ஜனநாயக போராட்டத்தில் குதித்துள்ள மலையக மக்களின் கோரிக்கை,  நியாயமானது.  எனவே, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க  மலையக தலைமைகள் முன்வரவேண்டும்' என ஈரோஸ் ஜனநாக முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோஸ் ஜனநாக முன்னணி வெளியிட்டுள்ள உடக அறிக்கையிலே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவத, 'இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலையும் இறப்பருமே காணப்படுகின்றன. இத்தகைய தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள், இரத்தத்தை வியர்வையாக்கி குளிருக்கும் அட்டைக்கடிக்கும் முகம்கொடுப்பதோடு,  உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வன விலங்குகளின்; தாக்கத்துக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

மண்சரிவுக்கு சொந்த பந்தங்களை பலிகொடுக்கும் இம்மக்கள், சந்ததி சந்ததியாக லயங்களில் தமது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இம்மக்கள், கடந்த சில நாட்களாக 1,000 ரூபாய் சம்பள உயர்வுகோரி ஜனநாயக ரீதியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களானது, இலங்கை அரசாங்கத்தையையும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களின் பார்வையையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கை என்பதை உணர்ந்து, இலங்கையின் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் சகல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இன்றுவரை முழுமையான ஆதரவுகளை மலையக மக்களுக்கும், மலையக மக்களின் பிரிதிநிதிகளுக்கும் வழங்கிவந்துள்ளதை இக்காலகட்டத்தில் நினைவுகூருகின்றோம்.

தற்போது, நாளொன்றுக்கு 450 ரூபாய் என்ற அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்க சம்பளம் வழங்கப்படுகின்றது. இந்தச் சம்பளம் 25 வருடங்களுக்கு முன்புள்ள நாட்டின் பொருளாதாரத்துக்கு பொருந்தும்.  

தற்போது நாட்டில் அத்தியாவசியப்  பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே, 1000 ரூபாய் சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருந்தும்.

எனவே, மலையகத்ததை பிரதிநிதித்துவப்படுத்தும்  பிரதிநிதிகள் மற்றும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கள் இணைந்து, முதலாளிமார்  சம்ளேமனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென,  ஈரோஸ் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகின்றது' என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .