எம். செல்வராஜா / 2020 மே 10 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டத்தில் செய்கை பண்ணப்படும் மலர்களை, கொழும்புக்கு அனுப்ப முடியாமல் உள்ளதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளகெட்டுவை, எல்ல, பண்டாரவளை, தியத்தலாவை போன்ற இடங்களில், சுமார் 160 பேர் இப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதோடு, இப் பயிர்ச்செய்கை மூலம் 800க்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரங்கள் தங்கியுள்ளன. இங்கு செய்கை செய்யப்படும் பல்வேறு வகையான மலர்கள், மாலை கட்டுவதற்காக, மாத்திரமல்லாது பல்வேறு தேவைகளுக்காக, கொழும்பிலுள்ள பல கோயில்கள், தேவாலயங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொழும்பில் அனைத்து செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளமையால், மலர்ச் செய்கையை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்றும் இதனால், அனைவரும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .