2025 மே 19, திங்கட்கிழமை

மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் எடுத்துரைத்தார்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தலைநகரமான நியூ டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் விசேட மாநாட்டில்   இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மலையக மக்கள் சார்பாக  கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,  மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் மலையக மக்களின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தார்.

இதன்போது, தற்போது இலங்கையில் விசேடமாக பெருந்தோட்ட மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள், தொழில் சட்டங்கள் மீறப்படுவது , சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் சர்வதேசத்திடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தொழிலாளர்கள்  தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி, வாழ்க்கை செலவு, அவர்களுடைய ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் மேலும் பெருந்தோட்ட நிர்வாகங்களின் மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் வெளியேயும் தொடர்ந்தும் குரலெழுப்பி இருந்தபோதிலும் நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய எவ்விடம் முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. ஆகவே  இந்த  நிலைமைத்  தொடர்பாக சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் தெற்காசிய நாடுகளுடைய சர்வதேச தொழிற்சங்க பிணக்குகள், அப் பிணக்குகளுக்கு தீர்வு எவ்வாறு பெறப்பட வேண்டும் என்ற தலைப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த  விசேட மாநாட்டில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X