Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 10 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
கண்டி மாவட்டத்தின் கம்பளை-தொழுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிவில், “சுப்பிரமணியராமய” எனும் தமிழ் பெயரிலான விகாரையொன்று உள்ளது.
1958களில், புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்த சுப்பிரமணியம் முதலாளி என்பவர், தனது சொந்த காணியில், பௌத்த விகாரைக்கு என ஒரு பகுதியை வழங்கி, இந்த விகாரையை நிர்மாணித்ததாகவும், இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால் “சுப்பிரமணியராமய” என, விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்துக்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர், பெயர சூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விகாரை அமைக்கப்பட்ட பின்னர், இப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்பட்டது என்றும் தற்போது சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விகாரையில், பிரதேசத்திலுள் பௌத்த மத சார்பான விடயங்களும் “தாம் பாசல்”, இந்து மக்களுக்குத் தேவையான “அறநெறி” ஆகியவை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடைக்காலப்பகுதியில், இந்த விஹாரையின் பெயரை மாற்றுவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் எனினும், தேரர் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago