2025 மே 19, திங்கட்கிழமை

மல்லியப்பு தோட்ட கோவிலிருந்து உண்டியல்கள் மாயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (21)  இரவு 10 மணியளவில் குறித்த கோவிலுக்குள் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருடர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X