Editorial / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
குறிப்பாக, மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 34 அடி வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக, 1969ஆம் ஆண்டு நீர் தேக்க நிர்மாணத்தின் போது நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரின் எச்சங்கள் தற்போது வெளியே தெரிந்துள்ளன.
முன்னைய மஸ்கெலியா நகரில் இருந்த ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், சுமனாராம விகாரை, இஸ்லாமியப் பள்ளிவாசல், விகாரையில் இருந்த புத்தர் சிலை மற்றும் கங்குவத்தை நகரில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றை இப்போது மக்கள் நேரில் காணக்கூடியதாக உள்ளது.
இந்த அரிய காட்சிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மஸ்கெலியா பகுதியில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
பாதுகாப்பு எச்சரிக்கை:
நீர் தேக்கப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"நீர் தேக்கப் பகுதிகளில் சகதி நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன், எக்காரணம் கொண்டும் நீர் தேக்கத்தில் இறங்கி நீராடக் கூடாது" என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் நீர் மின் உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



39 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
1 hours ago