2025 மே 05, திங்கட்கிழமை

மஸ்கெலியாவில் இருவருக்கு கொரோனா உறுதி

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா சுகாதார பிரிவுக்குட்பட்ட ப்ளெரண்சிக், பன்னியன் ஆகிய இரண்டு தோட்டங்களில், தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (23) உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொதுசுகாதார அதிகாரி நரேந்திரகுமார் தெரிவித்தார்.

இவ்விருவரும், கடந்த 20ஆம் திகதி, கொழும்பிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்தபோது, கலுகல பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என, மஸ்கெலியா சுகாதார அத்தியேட்சகர் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், இவ்விருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொதுசுகாதார அதிகாரி நரேந்திரகுமார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X