Editorial / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கெக்கிராவையிலிருந்து அக்குறணைக்கு, மாடுகளை சட்டவிரோதமான முறையில் லொறியில் கொண்டு சென்ற இருவரை, இன்று (25) கைதுசெய்துள்ள அலவத்துகொடை பொலிஸார், மாடுகளை மீட்டுள்ளதுடன், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினடிப்படையில், கண்டி - மாத்தளை வீதியில் வைத்து லொறியை வழிமறித்த பொலிஸார், மாடுகளை மீட்டதுடன், இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 10 மாடுகள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026