2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவர் ஒருவர் மாயம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டியிலுள்ள  பிரபல  பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராதென்ன பகுதியில் மஹாவலி ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது, மாணவர்கள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இதன்​போது ஒரு மாணவர் ஆற்றில் இருந்த பாறை ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டதால் கடும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய மாணவர் காணாமல் போயுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி- கிங்ஸ்வூட் கல்லூரி மாணவனே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கன்னொருவ – ரணபிம பாடசாலையின் மாணவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மாணவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X