2025 மே 03, சனிக்கிழமை

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது

Mayu   / 2024 ஜூலை 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமாக பொகவந்தலாவ பகுதியில் ராணி காடு தோட்ட  மற்றும்  காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீர் வழங்கும் மாஎலிய வனப் பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X