2025 மே 19, திங்கட்கிழமை

மாதோவை தொழிற்சாலையையும் முற்றுகையிட்ட இ.தொ.காவினர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமை மாதோவை தொழிற்சாலையையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் இன்று (22) பதிவானது.

மடுல்சீமை பிளான்டேசனுக்கு உட்பட்ட மாதோவை தோட்டத்தில் ,தோட்ட நிர்வாகம்  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக  அமர்த்த முற்படுவதாக, மக்கள் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து,செந்தில் தொண்டமான் அத்தோட்ட நிர்வாகத்தை கடுமையாக எச்சரித்தார்.

செந்தில் தொண்டமானின் பணிப்ப்புரைக்கு அமைய நேற்று இ.தொ.காவினரால் மாதோவை தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டது.

சென்ற வாரம் பட்டாவத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகம்  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக  அமர்த்த முற்பட்டதால்  இ.தொ.காவினரால் பட்டாவத்தை  தொழிற்சாலையும் முற்றுகையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X