2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மாலை நான்கு மணியுடன் கடமைக்கு முற்றுப்புள்ளி; நோயாளர்கள் அவதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜீ.எம்.குமார்

பலாங்கொடை பம்பஹின்ன பிரதேச வைத்தியசாலை, இரண்டு மாதங்களாக மாலை நான்கு மணிக்குப் பின்னர் மூடப்படுவதால், நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வைத்தியசாலையில், ஒரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றி வருகிறார். வைத்தியருக்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளப் போதிலும், வைத்தியர் நான்கு மணியுடன் சென்றுவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்கு அருகே, சப்ரகமுவ பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால், இங்குக் கல்வி கற்றும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட  மாணவர்கள், அவசர நிலைமையின்போது இந்த வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது.

அத்துடன், முத்தேட்டுவேகம, கலகம, பம்பஹின்ன, கிங்ச்சிகுனே போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் இந்த வைத்தியசாலையையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில், பிரதேச வைத்தியசாலை மாலை நான்கு மணியுடன் மூடப்படுவதால், சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான வைத்தியர்களையும் ஊழியர்களையும் பெற்றுத்தந்து  வைத்தியசாலையை மறுபடியும் பழைய முறைமைக்கு மாற்றி அமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .