2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

”மீண்டும் ஆரம்பிக்கவும்”

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

கொரோனா  தொற்று காரணமாக  கைவிடப்பட்டுள்ள இ.போ.ச பஸ் ​சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு புளத்கொஹூபிட்டிய பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 கொரோனா தொற்றையடுத்து புளத்கொஹூபிட்டியவை அண்மித்த பல பகுதிகளுக்கான இ.போ.ச பஸ் சேவைகளானது, இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும்  சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனனர்.

இதற்கமைய, கேகாலை பஸ் டிப்போ மூலம் முன்னெடுக்கப்பட்ட கெட்டியமுல்ல- மல்வானை ஊடாக கேகாலை மற்றும் கேகாலையிலிருந்து எலகல்ல, அவிசாவ​ளை பஸ் டிப்போ மூலம் முன்னெடுக்கப்பட்ட புளத்கொஹூபிட்டியவிலிருந்து வேகல்ல வீதிக்கான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்குமாறே  பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X