2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மீண்டும் மண்சரியும் அபாயம்

Editorial   / 2020 மே 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா.யோகேசன்

வட்டவளை தியகலை பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட கூடிய அபாயநிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டமையால், ஹட்டன், கண்டி, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து ஒரு நாள் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ள நிலையில், மீண்டும் மண்சரிவு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிகம் மழை பெய்யும்போது, தியகல சந்தியிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் சுமார் ஒரு கிலோமீற்றர் வரையான பகுதி மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .