Editorial / 2020 மே 21 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பிரதேசத்தில், முதியோர் கொடுப்பனவுகளை 10 நாள்களில் வழங்குவதற்கு, புதிய திட்டமொன்றை வகுத்துள்ளதாக தாபல் நிலையம் தெரிவித்துள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும் வர்த்தக சங்க தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேசத்துக்குட்படட யுலிபீல்ட், டோனிகிளிப், கிரிலஸபாம், மேபீல்ட் உள்ளிட்ட 50 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர், இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, கடந்த காலத்தில் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்த முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வற்காக, நான்கு, ஐந்து நாள்கள் வரவேண்டியிருந்தது என்றும் ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான 10 நாள்கள், அதிகாலையிலேயே வருகை தரவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் முதியோர் கொடுப்பனவு பெற்றுக்கொள்வோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதைக் கருத்தில் கொண்டு, நேற்று (20), தபால்நிலைய பொறுப்பதிகாரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடந்து, ஜுன் மாதம் முதல், தலா ஐந்து தோட்டங்ளாகப் பிரித்து, 10 நாள்களில் முதியோர் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago