Janu / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுகின்றன எனக் குற்றம் சாட்டி, மலையக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியம் ஹட்டன் ரயில் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (22) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளை நேரடியாக நிர்வகிப்பதன் காரணமாக, தோட்டப்புற மாணவர்களுக்கு முறையான ஆரம்பக் கல்வி வழங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், முன்பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமை தோட்ட நிர்வாகங்களுக்கு யார் வழங்கினர் என கேள்வி எழுப்பிய அவர்கள், அரசின் கீழ் இயங்கும் மாகாண சபைகளே தோட்ட முன்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் என சுட்டிக்காட்டினர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான தகுதிகளைப் பெற்றிராத பிள்ளை பராமரிப்பாளர்கள் முன்பள்ளிகளை நடத்துவதால், பல முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
இவ் விடயத்திற்கு விரைவான தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செ.தி.பெருமாள்

9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026