R.Maheshwary / 2022 ஜனவரி 27 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டஸ்பி என்ற பதுளை பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் 30 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (26) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதம் 23ஆம் திகதி லெட்சுமணன் சந்ரலோகா என்ற பெண்ணே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரின் செருப்பு சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் காணப்பட்டதை அடிப்படையாக கொண்டு, பொலிஸ் மோப்ப நாயின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தம் படிந்த ஆடைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
11 minute ago
17 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
18 minute ago
19 minute ago