2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

ஊவா, பரணகமை திம்புலன பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீபிகா பிரியதர்ஷினி (வயது 33) என்பவர், ஞாயிற்றுக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு, மோப்பநாயுடன் வந்த பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர். இதன்போது பொலிஸ் மோப்ப நாயானது, சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சந்தேகநபரின் வீட்டை அடையாளங்காட்டியுள்ளது.

எனினும், அவ்வீட்டிலிருந்து சந்தேக நபரும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .