Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகிய மூவரையும் பதவி நீக்கக் கோரி, ஆசிரிய தொழிற்சங்கங்கள் பன்னிரண்டு இணைந்து, ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்கவிடம் நேற்று (25) மகஜர் கையளித்துள்ளன.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை மண்டியிட வைத்தமை, நிந்தித்தமை ஆகியனவற்றுக்கு உறுதுணையாக இருந்த ஊவா மாகாண கல்வி முக்கியஸ்தர்கள் மூவரை, கடமைகளிலிருந்து அகற்றுமாறு கோரியே, மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி சேவை ஊழியர் சங்க பிரதான செயலாளர் ஆர். பிரேமசிறி, ஊவா ஆசிரிய சேவை சங்க உப-செயலாளர் பிரியந்த வருசமான, மாவட்ட செயலாளர் நந்தன ஹப்புகொட, இலங்கை ஆசிரிய சங்க பதுளை மாவட்ட செயலாளர் சரத் ரட்னாயக்க, தேசிய கல்விச் சேவை சங்க பதுளை மாவட்ட தலைவர் டி.எம்.பத்மசிரி ஆகியோர் மேற்படி மகஜரை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் பியதாச ரட்னாயக்க, பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க ஆகியோரை பதவி நீக்கக் கோரியே, மேற்குறிப்பிட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026