2025 மே 19, திங்கட்கிழமை

மேய்ச்சல் பசுவை திருடியவர் சிக்கினார்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுவை களவாடி விற்பனை செய்ய முற்பட்டவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில்  இருந்து நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்திற்கு  வருகை தந்த இவர்,  மீண்டும்  இன்று (24)  காலை ஹட்டன் நோக்கி செல்லும் வழியில், பங்களாவத்த பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுவின் கயிற்றை அறுத்து,  இழுத்துச் சென்றுள்ளார்.

இதனைக்  கண்ட ஒருவர் ஏன்? இவ்வாறு பசுவை, இழுத்துச் செல்கின்றீர்கள் என் வினவிய போது, இதனை விற்பனை செய்யப் போகிறேன் , நான் வறுமையில் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

  அத்துடன், 30 ஆயிரம் ரூபாய்க்கு நானுஓயாவில் விற்பனை செய்ய போவதாகவும் கூறியுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த அந்த நபர், நானுஓயா பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்த நிலையில்,  பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, சந்தேகநபரை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X