2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளைத் திருடர்களைத் தேடும் பொலிஸார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர், தலைக்கவசம் அணியாமல் திருடிய ​மோட்டார் சைக்கிளுடன்,நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை பகுதி நோக்கி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நாவலப்பிட்டி நகர மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்கு பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ​மோட்டார் சைக்கிள் ஒன்று, நேற்று ( 19) அடையாளம் தெரியாத இருவரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாருக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைச்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகைத் தந்த சந்தேகநபர்கள் இருவ​​ர், தலைக்கவசம் இல்லாமல் கம்பளை பகுதியை நோக்கி, மோட்டார் சைக்கிளைக் கொண்டுச் சென்றுள்ளனர்.

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சிகள், நகரிலுள்ள பல பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X