Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொட்டகலை - யதன்சைட் தமிழ் பாடசாலையில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மாகாண சபையின் கவனத்துக்கு கொண்டு வருவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொட்டகலை யதன்சைட் தமிழ் பாடசாலையின் வகுப்புக்கள் பல யதன்சைட் தோட்டத்திலுள்ள பாழுடைந்த தேயிலைத் தொழிற்சாலையில் பல வருடங்களாக இயங்குவதால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலையிலுள்ளனர்.
இந்தப்பாடசாலைக்கு, விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நிலைமைகளை ஆராய்ந்துள்ளதோடு, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். மேலும் இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையின் கவனத்துக்கும் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago