2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

யாத்திரை சென்றவர் சுகவீனமடைந்து மரணம்

Janu   / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (22) மதியம் இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய சோமபால என்பவர் அவரது குடும்பத்தினருடன் சிவனொளி பாத மலைக்கு செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிறமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வர பட்டு அங்கு இருந்து அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடட்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .