2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ரூ.27 இலட்சம் செலவில் குடிநீர் திட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கேகாலை சூரியபுர கிராமத்தில், 28 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம், மக்களின் பாவனைக்காக, ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாண சபையின் நிதிஒதுக்கீட்டில், மேற்படி கிராமத்தில் குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்மூலம், சூரியபுர கிராமத்திலுள்ள 300 குடும்பங்கள், குடிநீரை பெற்றுக்கொள்வர் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் திட்டத்தை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அதுல அதகம மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .