2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

லொறி விபத்தினால் மின்கம்பம் சேதம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

எம்பிலிப்பிட்டிய- வீரகொட்டியவுக்கு பயணித்த லொறியொன்று, இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில், இரத்தினபுரி பிரதான வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் வைத்து, மின் கம்பத்தில மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்றக் காலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், மின்கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் என்பன முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விபத்தினால், மேற்படி வீதியுடனான போக்குவரத்து 45 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சாரதியின் நித்திரைக் கலக்கமே இவ்விபத்துக்கு காரணமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .