2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

“லிதியாவுக்கு நீதி வேண்டும்”

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரேஸ் குமார்

பதுளையில் கொலை செய்யப்பட்ட மாணவி லிதியாவுக்கு நிலையான நீதி கேட்டு உடுவரை பெண் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை – ஹாலி-எல தமிழ் மகா வித்யாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். 

உடுவரை கீழ்  பிரிவு, 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த (தர்மராஜ் லிதியா) 18 வயதான மாணவியே பாடசாலைக்கு  சென்று  வரும் வழியில் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  

மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நிலையான நீதி கேட்டு உடுவரை பெண் தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இன்று வேலையை  பணிப்பகிஸ்கரிப்பு செய்த பெண் தொழிலாளர்கள்   பாடசாலை மாணவிகள் பாதுகாக்கப்படவேண்டும், பெண்கள் உரிமைகள்   பாதுகாக்கப்பட்ட வேண்டும்,  மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நிலையான நீதி கேட்டு பெண் தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.   (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X