2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லொறி விபத்தில் அறுவர் காயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச

பசறை, தென்னக்கும்பர பிரதேசத்தில், இன்றுக் காலை இடம்பெற்ற லொறி விபத்தில் படுகாயமடைந்த அறுவர், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக, பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னக்கும்பர தோட்டத்தில், நேற்று இரவு இடம்பெற்ற தேர்திருவிழாவையடுத்து, தேரை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக, லொறியில் சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .