2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

வாகன வியாபாரத்தில் மோசடி

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டியில் சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களை வாடகைக்குப் பெற்று அல்லது திருடி, போலி புத்தகங்களை தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில், கண்டி - குருதெனியா பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், அலவத்துகொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சட்ட விரோத வாகன விற்பனையை கண்டறிந்துள்ளனர்.

வாகன மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்பலானது, வாகனங்களுக்கு போலியான புத்தகங்களை தயாரித்துள்ளதுடன், பத்திரிகைகளில் விளம்பரங்களும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட போலியான இலக்கத்தை கொண்ட காரையும், அதன் உண்மையான இலக்கத்தையுடைய காரையும்

பொலிஸார் கண்டியில் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், வார இறுதியில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரத்தை நம்பி, 1,975,000 ரூபாய்க்கு காரைக் கொள்வனவு செய்துள்ளார். காரின் பதிவை புதுபிப்பதற்காகச் சென்றபோது, அக்காரின் இலக்கத்துக்கு வேறு ஒரு கார் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட போலியான இலக்கத்தை கொண்ட காரையும், அதன் உண்மையான இலக்கத்தையுடைய காரையும்

பொலிஸார் கண்டியில் கைப்பற்றியுள்ளனர்.

நாடு முழுவதிலும் போலியான முறையில் வாகனங்களுக்கு தேவையான பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்யும் கும்பலை கைது செய்வதற்கான


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .