Kogilavani / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் செங்;கொடிச்சங்கத்தின் கிளையான, வீட்டுப் பணியாளர்;கள் சங்கத்தின் 4ஆவது வருடாந்த மாநாடு கண்டி ஈ.எல்.சேனாநாயக்கா சிறுவர் நூலகக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
இம்மாநாட்டில் கண்டி, ஹட்டன், நுவரெலியா, மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து இதன் அங்கத்தவர்;கள் கலந்துகொண்டனர்;. இந்நிகழ்வில், செங்கொடிச் சங்கப் பொதுச் செயலாளர்; மேனகா கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்;. இதன்போது உரையாற்றிய அவர்,
'வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர்களே என்ற வகையில் அவர்களது சம்பளத்தை நிர்ணயிப்பது தொடர்பிலான போராட்டத்தில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். எங்களது உரிமைகளுக்காக நாமே போராட வேண்டும்' என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago