2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வீடு புகுந்து திருடிய நால்வர் கைது: ஒருவர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டிலுள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு தங்க ஆபரணங்கள் உட்பட கார் என அனைத்தையும் களவாடிச் சென்ற ஐவரில் நால்வரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (07),  கொடகவெல பகுதியில் இரவு வேளை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்ததுள்ளது. 

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கிணங்க, குறித்த சந்தேகநபர்களை, கல்தொட்ட - பலாங்கொடைப் பிரதான சந்தியில் வைத்து, போக்குவரத்துப் பொலிஸாரினால் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து, வெவ்வேறு வகையான, வெவ்வேறு தரத்திலான கைத்துப்பாக்கிகள், பெருமளவிலான மாணிக்கக்கற்கள்,  கஜமுத்து 2, கஸ்தூரி 01, பெருமளவிலான தங்காபரணங்கள் உட்பட 2900 பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ராஜகிரிய பகுதியில் காரொன்றினை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாகவும், கொள்ளையிட்ட காரினை விகாரையொன்றில் விட்டுச் சென்றுள்ளனர்.சந்தேகநபர்கள், பாதுக்க, பலாங்கொடை, ரம்புக்கனை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .