2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வீதிகளில் குப்பை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Sudharshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி- மாத்தளை ஏ-9 வீதியின் இரு மருங்குகளிலும் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி,  புதன்கிழமை (27) தெரிவித்தார்.

'ஏ- 09 வீதி, கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் பிரதான வீதியாகும். இதன் ஊடாக  பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என பலரும் பயணிக்கின்றனர். இவ்வீதியின் இருமருங்குகளிலும் குப்பைகள் நிறைந்து கிடப்பதை காணும் போது,  அவர்கள் மனங்களில் இலங்கை தொடர்பான ஒரு தவறான எண்ணக்கரு தோன்றக்கூடும்.

குப்பைகளை அகற்றுவதற்கு தகுந்த திட்டம் ஒன்று, அக்குறணை பிரதேச சபை வகுத்துள்ளது. எனவே, பிரதேசவாசிகள் அனைவரும் அக்குறணை பிரதேச சபையுடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என பொலிஸ் பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.

வெளியிடங்களிலிருந்து வாகனங்களில் வந்து குப்பை கொட்டுபவர்களை இனங்காண்பதற்காக சீ.சீ.டிவி கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .