Sudharshini / 2016 மே 03 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செனரத் பண்டார
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை(29) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரச பல்கலைக்கழகங்களின் ஆறு வைத்தியபீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேராதனை கிளை நேற்று(3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பேராதனை, கம்பளை, கண்டி ஆகிய வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை மூடுமாறு கோரியும் வைத்தியபீட மாணவர்கள் மீதான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது வைத்தியசாலைகளின் மதிய நேர இடைவேளையின்போது முன்னெடுக்கப்பட்டது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026