Kanagaraj / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய, வாகன சாரதியை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், நேற்று செவ்வாய்க்கிமை உத்தரவிட்டார். ஜா-எல, கடான பகுதியைச் சேர்ந்த சாரதியே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து, திங்கட்கிழமை மாலை 3.30க்கு வீதியைக் கடக்கமுயன்ற கர்ப்பிணியான பெருமாள் கோகிலா (வயது 34) என்பவரே பலியானார்.
குறித்த சாரதி, வாடகை லொறியின் மூலம் நுவரெலியாவுக்கு வந்துள்ளார். எனினும், நுவரெலியாவிலுள்ள வீடொன்றின் மதில் மீது அந்த லொறி மோதியதில், மதில் சேதமடைந்துள்ளது.
அந்த மதிலைக் கட்டிமுடிப்பதற்குத் தேவையான பணத்தைச் செலுத்தாமையால் அவர், நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களுக்கு பின்னர், நட்டஈட்டை வழங்கிவிட்டு, கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago