2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

விபத்தினால் அரைமணிநேரம் போக்குவரத்துத் தடை

Thipaan   / 2016 ஜனவரி 24 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இராமச்சந்திரன்

கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியின், வட்டவளை  பொலிஸ் பிரிவுக்குபட்ட தியகல சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தால், சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பஸ் வண்டியும் தலவாகலையிலிருந்து கினிகத்தேன சென்ற கனரக லொறியும் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதபோதிலும் சம்பவ இடத்துக்கு விரைந்த வட்டவளை பொலிஸார் போக்குவரத்து தடையை நீக்கியதுடன், விபத்து தொடர்பிலான விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .