2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

கண்டி- பூஜாபிட்டிய வீதி, அம்பதென்னை முல்லேகம பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், படுகாயமடைந்த நிலையில், பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர் சிகிச்சைப் பலனின்றி, நேற்றுக் காலை உயிரிழந்ததாக பூஜாப்பிட்டிய  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், டபிள்யூ.எம்.விஜேரத்ன (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளா்ர.

இவ்வீதி வழியாக பயணித்த வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .