Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான நேரடி அபிவித்திகளை முன்னெடுக்கும் நோக்கில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு அமைப்பாளர் பதவியை வழங்கியவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆவர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
வருகின்ற பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களில் கடந்த காலத்தை விட நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குககளை ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அமோக வெற்றியை பெறும் எனவும் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் புதிய மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பதவிகள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக, ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பு செயலாளராக கடமையாற்றிய பெரியசாமி பிரதீபன் நுவரெலியா தெரிவுசெய்யப்படுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 11 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினருக்கு இவ்வாறான பதவிகளை வழங்கியதில்லை. நுவரெலியா மாவட்ட தோட்ட தொழிலாளரேகளுக்கு ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில் எனக்கு வழங்கப்பட்ட அமைப்பாளர் பதவி கிடைத்துள்ளமை மகிழ்சியளிக்கின்றது
மலையக பிரதேசத்தின் அபிவிருத்தியானது அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றனது. இனிவரும் காலங்களில் அவ்வாறான வேறுபாடு இல்லாத அபிவிருத்தியை ஜனாதிபதியின் வழிகட்டலினூடாக முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago