Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக அனுப்பும் பணத்தை, நாட்டிலுள்ள அனைத்து பிரதான தபாலகங்கள் மூலமும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இத்திட்டம் செவ்வாய்க்கிழமை (8) முதல் அமுல்படுத்தப்படுவதாக தபால் மற்றம் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் ஊடாக முதற் கட்டமாக நாட்டிலுள்ள 650க்கும் மேற்பட்ட பிரதான தபாலகங்களில் இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்துள்ளதாகவும் இதன் இரண்டாம் கட்டத்தில் நாட்டிலுள்ள 3,500 க்கும் மேற்பட்ட உப-தபாலகங்கள் மூலமும் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
'வெளிநாட்டில் பணிபுரியும் தமது உறவுகள் அனுப்பும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கிராமப்புர மக்கள், பிரதான நகரங்களுக்கு வந்து வீணாக காலத்தையும் பணத்தையும் செலவு செய்வதை தவிர்க்கும் நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
14 Jul 2025
14 Jul 2025