2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

விழுந்த தாய் பலி: மகன் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மகனுடன், மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்திலிருந்து அமர்ந்துசென்றுகொண்டிருந்த தாய், கீழே விழுந்து பலியான சம்பவத்தையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவருடைய மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் கட்டுகஸ்தோட்டை பகுதியில், நுகவெல களுகல்ல சந்தியிலேயே சனிக்கிழமை மாலை 5.20க்கு இடம்பெற்றுள்ளது.

குருநாகல் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பின்ஆசனத்தில் அமர்ந்து வந்த 49 வயதான துஷரா சந்தமாலி என்பவருக்கு ஏற்பட்ட தூக்க கலைப்பு காரணமாக அவர் திடீரென கீழே விழுந்துவிட்டார்.

தனது தாய் கீழேவிழுந்த சம்பவத்தினால், மகன் செலுத்திச்சென்ற மோட்டார், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தையடுத்து கைது செய்த அவருடைய மகனை, கண்டி நீதவான் முன்னிலையில் சனிக்கிழமையன்றே ஆஜர்படுத்திய போது, அவர் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .