2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வேவர்லித் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கரப்பத்தனை வேவர்லித் தோட்ட தொழிலாளர்கள்,  இன்று வெள்ளிக்கிழமை காலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டுள்ளதாகவும் இதனால் தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டத்திலுள்ள தேயிலை மலைகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து இதில் தொழில் செய்யுமாறு தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதன் காரணமாக 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்கமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்த கிலோ கிராம் தேயிலை பறித்தால் அதற்கு சம்பளம் வழங்கமுடியாது என தோட்ட நிர்வாகம் கூறுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தேயிலைச் செடிகளில் கொழுந்து குறைந்துள்ளமையால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ  கிராம் தேயிலை பறிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்தபோதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .