2026 மே 07, வியாழக்கிழமை

வட்டவளையில் வான் விபத்து: 8 பேர் காயம்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

காலியிலிருந்து ஹட்டன் வரை பயணித்த வானொன்று வட்டவளை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி, 10 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில், அதில் பயணித்த 8 பேர் காயமடைந்து, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்து, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக, நாவலப்பிட்டி  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வானில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு அல்லது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமோ இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .