Sudharshini / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளை, இரத்தோட்டை பகுதியிலிருந்து யட்டியந்;தோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து ஒன்பது கிலோகிராம் வல்லப்பட்டயை அலவத்துகொடை பொலிஸார் மீட்டுள்ளதுடன் ஐவரை கைதுசெய்துள்ளனர்.
அலவத்துகொடை சய்ஸ்டன் பிரதேசத்தில் திங்கட்கிழமை (08) மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இம்முச்சக்கர வண்டியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் பச்சை கோப்பி நிரப்பப்பட்ட பைகளுக்குக் கீழ், வல்லப்பட்டையை மறைத்து வைத்துக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
மேலும், வல்லப்பட்டை மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று கோடரிகள், இரண்டு கத்திகள் உட்பட பல உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யட்டியன்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago