2025 மே 19, திங்கட்கிழமை

வாவியில் மிதக்கும் மரைகளின் உடலங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மரைகளின் சடலங்களை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாவியில் அதிகமான மரைகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதாகவும் இவற்றை விரைவாக அகற்றுவது அவசியம் என்றும் நுவரெலியா பொலிஸ் உதவி அத்தியட்சகர் சமந்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வாவியில் மரைகளின் உடலங்கள் மிதப்பதாக அம்பேவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த தகவலுக்கமைய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட நுவரெலியா பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களிடம் விசாரணையை  முன்னெடுத்தனர்.

இந்த விசாரணைகளின் பின்னர், இது  தொடர்பில் கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர், ஹோட்டன் சமவெளி சுற்றாடல் மற்றும் அம்பேவல பகுதிகளில் உலவும் மரைகள் வேட்டைக்காரர்களால் வலைகளில் சிக்கும் அதேவேளை, உணவு , நீர் தேடி அம்பேவல வனத்துக்குள் வரும் மரைகள் வேட்டை நாய்களின் கடிக்கு  இலக்காகி, வாவிக்குள் பாய்வதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் நீரிலிருந்து வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி மரைகள் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 996 ஏக்கர் பரப்பில் உள்ள குறித்த வாவியில் பலர் சட்டரீதியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்குள் பாரியளவு மரைகள் வாவியில் இறந்து மிதப்பதால் நீர் பாரியளவில் மாசுற்றுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை அம்பேவல வனத்துக்குள் அநாதரவான சுமார் 30 வேட்டை நாய்கள் சுற்றித் திரிவதாகவும் இவை வனத்திலுள்ள மான், மரை, முயல்களை வேட்டையாடுவதாகவும் இந்த வனத்துக்குள் நுழைபவர்கள் சாதாரணமாகவே குறித்த வேட்டை நாய்களை அவதானிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு மரைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு  அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X