2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விசேட தேவையுடையோருக்காக சக்கர கதிரைகள் அன்பளிப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 05:47 - 2     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நேற்றைய சர்வதேச விசேட தேவையுடையோர்களுக்கான  தினத்தினை முன்னிட்டு வட்டகொட பிரஜாசக்தி நிலையத்தினால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்கள் இனங்காணப்பட்டு அவர்களில் நான்கு பேருக்கு சக்கர கதிரைகள் வழங்கப்பட்டதுடன் விசேட தேவையுடைய சிறுவர்கள் நிலைய மாணவர்கள் போட்டி நிகழ்வுகளிலும் கலைநிகழ்வுகளிலும் மிகவும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு பிரஜாசக்தி, நவசக்தி செயற்றிட்ட முகாமையாளர், தலவாக்கலை பொதுநல சுகாதார வைத்திய அதிகாரி, பிரஜாசக்தி நிலையத்தின் நுவரெலியா மாவட்ட பிராந்திய இணைப்பாளர், நவசக்தி செயற்றிட்ட இணைப்பாளர்கள், வட்டகொட பிரஜாசக்தி இ-கியோஸ்க் நிலைய இணைப்பாளர்கள், பேயாவல் பாடசாலை அதிபர், தோட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டனர்.  

விசேட தேவையுடையவர்களும் மற்றையவர்களுக்கு இணையாகக் காணப்பட வேண்டும் என்ற நோக்கில் பிரஜாசக்தி செயற்திட்டம் இவ்வாறான தினத்தில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றமை விசேட அம்சமாகும்.


  Comments - 2

  • கலையரசன் D Friday, 13 July 2018 04:28 PM

    தம்பி Headinjury patient

    Reply : 0       0

    கலையரசன் D Friday, 13 July 2018 04:28 PM

    தம்பி Headinjury patient

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .