2025 மே 19, திங்கட்கிழமை

விட்டமின்களை உண்ட பின்னர் ஆடுகள் உயிரிழந்தன

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

கேகாலை கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகள் திடீரென உயிரிழந்துள்ளன.

இந்த மாதம் 14ஆம் திகதியிலிருந்து கேகாலை பிரதேசத்திலுள்ள விலங்கு உணவு வர்த்தக நிலையமொன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விட்டமின் மருந்தொன்றை வழங்கிய பின்னரே 13ஆடுகள் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கேகாலை- நாகொல்ல பிரதேசத்தில் திடீரென 17 ஆடுகள் உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கேகாலை பகுதிக்கு பொறுப்பான கால்நடை வைத்தியரிடம் வினவியபோது, உயிரிழந்த ஆடுகளின் உடற்பாகங்களை பேராதனை மிருக வைத்திய ஆய்வு கூடத்துக்கு அனுப்பியதாகவும், அதன் அறிக்கைக்கு அமைய பக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி அல்லாத மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் குறித்த ஆடுகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளின் மாதிரியை பேராதனை மிருக வைத்திய ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கை இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X