Editorial / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா - பிரவுண்லோ பகுதியில் நேற்று (16) இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகி, மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையில் இருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டியிலும் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக்குள்ளான இரு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026