மு.இராமச்சந்திரன் / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள்ள,ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியிலுள்ள கொட்டகலைப் பகுதியில், கெப் வண்டியில் மோதுண்டு ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக, திம்புள்ள பத்தனைப் பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவத்தில், கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தைச் சேர்ந்த, 70 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான, எஸ் சண்முகம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொட்டகலை, நுவரெலியா பிரதேச சபைக்கருகில், நேற்று (06) மாலை 2 மணியளவில் அவர் பாதையைக் கடக்க முற்பட்டப்போது, லிந்துலையிலிருந்து கொட்டகலை நோக்கிவந்த கெப் வண்டியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரை, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதித்தப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப்போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்திசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
தனியார் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான கெப் வண்டியின் சாரதியை, திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago