Editorial / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன்
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதி, ஹட்டன் எம்.ஆர்.நகரப்பகுதியில், இன்று (16) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றுள்ளாரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்கோயாவிலிருந்து ஹட்டனுக்கு, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து டிக்கோயாவுக்கு பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய மாணவர்களும் சாரதியும் சிறுசிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கார் சாரதி, வாகனத்தைத் தவறான பகுதியில் செலுத்தியதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவன், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளாரென்றும், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026