Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், வான் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருவானபுர பகுதியில் நேற்று (040 மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச்சென்ற வான் ஒன்றில் ருவான்புர பகுதியில் இருந்து அட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டி பிரதான பாதையில் நுழைய முற்பட்டபோதே மோதுண்டு வித்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ருவான்புர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமைடைந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணம் என அட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன், முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago